ஒரு வேலை நிமித்தமாக கோவை வரை சென்றிருந்தோம்.
அணைத்து வேலைகளையும் முடித்து விட்டு, கோவை ரயில் நிலைய 1 ஆம் பிளாட்பாரத்தில் அமர்திருந்தோம்..
மங்களூரில் இருந்து.. திருச்சி வழியாக எழும்பூர் வரை செல்லும் அதி விரைவு வண்டி .. மித மந்தமாக ஒரு மணி நேரம் கழித்து வந்தது.
இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்து.. ஸ்லீப்பர் பெட்டியில் ஏறி.. TTE இடம் பணம் கொடுத்து.. ஸ்லீப்பர் டிக்கெட் வாங்கினோம் திருப்பூருக்கு (உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா!!!)
அங்கே ஒரு பெரியவர் படுத்திருந்தார்.
காவி உடை.. கையில் ஒரு பை.. எழும்பும் தோலுமாய் கைகள் நடுங்க பார்க்கவே பரிதாபகமாக இருந்தது.
கண்களில் பசி மயக்கம்.. அவரிடம் ஒரு ஏக்கம்..
அவரிடம் சாப்பிட எதாவது வேண்டுமா என்று கேட்டேன்..
தலையை மட்டும் ஆடினார்.
நான் சாப்பாடு வாங்கி வருகிறேன் என்று சொல்லி எழுந்தேன்.
என் கையை பிடித்து எழுந்தவர்... ஆசுவாசப்படுத்தி கொண்டு..
வேற எதாவது வாங்கி குடு என்றார்..
நான் இரண்டு பாக்கெட் வொண்டெர் கேக் வாங்கி கொடுத்தேன்...
உதறிய கைகளோடு வாங்கி கொண்டு..
சாப்பிட்ட அவரை பார்க்கும் போது .. கண்கள் கலங்கியது...
எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டேன்..
தெரியவில்லை என்றார்..
திருப்பூர் வந்தது..
இறங்க முற்படும் போது .. அவரின் கண்கள் எங்களையே பார்த்து கொண்டிருந்தது...
எங்களை தாண்டி வண்டி செல்லும் வரை... பார்த்து கொண்டே இருந்தார்
மனம் கனத்து வருத்ததுடன் நாங்கள் நடந்தோம்.
மனதில் ஆயிரம் கேள்விகள்..
யார் அவர்..? குடும்பம் இல்லையா...?
பிள்ளைகள்..?
எந்த கேள்விக்கும் விடை தெரியவில்லை..
அவர் கண்டிப்பாக ஒரு தந்தையாக இருந்திருப்பார் தானே.??
பின் ஏன் அவருக்கு இந்த நிலைமை ..
உலகத்தில் நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒரு பாடத்தை எனக்கு கற்று தருகிறார்கள்..
No comments:
Post a Comment