Wednesday, 13 March 2013

என்னை சுற்றி எத்தனையோ மனிதர்கள் ..

எத்தனையோ உணர்வுகள்..

காதலியே  கதி என்று சிலர்..

காதலின் வழியே காமத்துக்காக சிலர்..

பெண்கள் என்றால் பொய் என்று சிலர்..

காதலில் தோல்வியுற்ற காமெடியனாய்

நடுவிலே நான்...

இன்னும் என்ன தோழா..

என்றோ ஒரு நாள்.. மாணவனாய் இருந்த சமயம், ஆத்திரத்தில் எழுதிய வரிகள்...
இன்று வீறு கொண்டு எழுந்திருக்கும் மாணவர்களுக்கு சமர்ப்பணம்.

====

எழுவோம் தோழா..
எத்திசையும் சிதைந்திருக்கும்..
ஊழால்  ஊறியிருக்கும் 
நம் வீட்டை மீட்போம்...
வெல்வோம் நாம்..
வெல்வோம் நாம்,..
வெறி கொண்ட வேங்கையாய்..
சவபெட்டியை கூட பணபெட்டியாய் மாற்றிய 
மனிதர்களை 
சவப்பெட்டியில் நாம் புதைப்போம்...
புதையுண்ட ஜனநாயகத்துக்கு 
புத்துயிர் கொடுப்போம்..
சாதிகள் மறந்து...
மதங்கள் துறந்து..
மனிதனாய் வாழும்..
மாணவனே ஒன்றுபடு..
கருப்பு பணத்தில் கூட சிரிக்கும்
தேச தந்தையின் 
இழி நிலையை மாற்ற...
மாணவனே ஒன்றுபடு..
சொந்த நாட்டை சுரண்டும் கொள்ளையனை...
செந்தழலில் சிதைப்போம்..
மாற்றம் காண்போம்...
நெருப்பினில் நடப்போம்..
சாவை அழைப்போம்...
போனால் போகட்டும் இந்த உயிர்...
இந்த மண்ணிற்காக...
நாம் எழுவோம் தோழா...
போர் முரசடிப்போம்...
களம் காணுவோம்...
தேசத்தை தின்றவர்களை...
ஆளுக்கொரு தலைபரிப்போம்...
பிள்ளைக்கு பால் இல்லையாம் ..
இன்னும் முல்லைக்கு தேர் வழங்கியதை
பெருமையடிக்கிறோம்...
பொருத்தது போதும்..
பொங்கி எழுவோம்..
மாணவ வெள்ளம்...
தேசிய எதிரிகளை..
திசை தெரியாமல் செய்யட்டும்..
என்ன வளம்  இல்லை இந்த திருநாட்டில்..
ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில்..
நம் நாட்டை நாம் சீரமைபோம்...
வீறு கொண்டு எழுவோம் தோழா..
வெல்வோம் நாம்...

Tuesday, 12 March 2013

அன்று

அவளுக்காக  எழுதிய வரிகள்..

இன்று

என்னை பார்த்து சிரிக்கின்றன..

போடா முட்டாள் என்று..

-----------------------------------

​​அவள்..
என்னவள்..
என்னை விட்டு செல்லவில்லை..
என் காதலை முறுக்கேற்ற..
மௌனமெனும் ஆயுதத்தை..
வீசினால் என் மேல்..
காதலின் வலி எவ்வளவு கொடுமையானது..
என்பதை கற்றுகொடுதது..
அவளின் பிரிவு..
என் கண்களில் கண்ணீர்..
எல்லாம் முடிந்தது..
என்று நான் நினைத்தபோது..
அவளின் வார்த்தைகள்..
உனக்காக என்றும் நான் இருப்பேன்..
வலி கலந்த நிம்மதி என் கனத்த இதயத்தில்..
காத்திருப்புடன் கண்கள் மூடுகிறேன்..
கண்ணீர் துளியுடன்..
கன்னங்கள்..
---------------------------------------------



ஒரு வேலை நிமித்தமாக கோவை வரை சென்றிருந்தோம்.

அணைத்து வேலைகளையும் முடித்து விட்டு, கோவை ரயில் நிலைய 1 ஆம் பிளாட்பாரத்தில் அமர்திருந்தோம்..

மங்களூரில் இருந்து.. திருச்சி வழியாக எழும்பூர் வரை செல்லும் அதி விரைவு வண்டி ..  மித மந்தமாக ஒரு மணி நேரம் கழித்து  வந்தது.

இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்து..  ஸ்லீப்பர் பெட்டியில் ஏறி.. TTE இடம் பணம் கொடுத்து..  ஸ்லீப்பர் டிக்கெட் வாங்கினோம் திருப்பூருக்கு  (உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா!!!)

அங்கே ஒரு பெரியவர் படுத்திருந்தார்.

காவி உடை.. கையில் ஒரு பை.. எழும்பும் தோலுமாய் கைகள் நடுங்க பார்க்கவே பரிதாபகமாக இருந்தது.

கண்களில் பசி மயக்கம்.. அவரிடம் ஒரு ஏக்கம்.. 

அவரிடம் சாப்பிட எதாவது வேண்டுமா என்று கேட்டேன்..

தலையை மட்டும் ஆடினார்.

நான் சாப்பாடு வாங்கி வருகிறேன் என்று சொல்லி எழுந்தேன்.

என் கையை பிடித்து எழுந்தவர்... ஆசுவாசப்படுத்தி கொண்டு..

வேற எதாவது வாங்கி குடு என்றார்..

நான் இரண்டு  பாக்கெட்  வொண்டெர் கேக் வாங்கி கொடுத்தேன்...

உதறிய கைகளோடு வாங்கி கொண்டு.. 

சாப்பிட்ட அவரை பார்க்கும் போது .. கண்கள் கலங்கியது...

எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டேன்..

தெரியவில்லை  என்றார்..

திருப்பூர் வந்தது..

இறங்க முற்படும் போது .. அவரின் கண்கள் எங்களையே பார்த்து கொண்டிருந்தது...

எங்களை தாண்டி வண்டி செல்லும் வரை... பார்த்து கொண்டே இருந்தார் 

மனம் கனத்து வருத்ததுடன்  நாங்கள் நடந்தோம்.

மனதில் ஆயிரம் கேள்விகள்..

யார் அவர்..? குடும்பம் இல்லையா...?

பிள்ளைகள்..?

எந்த கேள்விக்கும் விடை தெரியவில்லை..

அவர் கண்டிப்பாக ஒரு  தந்தையாக இருந்திருப்பார் தானே.??

பின் ஏன் அவருக்கு இந்த நிலைமை ..

உலகத்தில் நான் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒரு பாடத்தை எனக்கு கற்று தருகிறார்கள்..  





வேதனை வரிகள்

பாசத்தை பொழிந்தேன்..
வெறுப்பு மழையை பொழிந்தாள்
உண்மைகளை உரைத்தேன்..
பொய்களால் பொசுக்கினாள்..
என் நேசமும் பாசமும் குப்பையில்..
தவறுகள் செய்தேன் நான்..
தண்டனைகள் கடுமை தான்..
ஆனால் ஏனோ கொடுமைகளாகி போனது..
சிவந்த புண்ணில் ஒரு செவ்வேல்..
வழியால் துடித்த என்னை..
அரவணைக்கவும் ஒரு கை தந்தான் இறைவன்..
உறவுகள் எல்லாம் மறைந்தது..
பொய்யான உறவுகள் மதிக்க படுவதும்..
மெய்யான உறவுகள் மிதிக்க படுவதும்..
இயல்பானது இவ்வுலகில்..
உண்மையான என் உறவை..
உணர்த்து கொள்வாய் நீ ஒரு நாள்..

என்றும் அன்புடன்..

Sunday, 17 February 2013

நான் யார்? எதற்காக எழுதுகிறேன் என்று எனக்கு தெரியாது.. என்னை பற்றி சில வரிகள்...

என் மேல் அன்பு செலுத்தி நம்பிக்கை வைத்த  பல நல்ல உள்ளங்களை காயப்படுத்தியவன்..

அதிகமான நண்பர்கள் இல்லை .. இருக்கும் நண்பர்களையும் தக்க வைத்து கொள்ள தெரியாதவன்..

என்னை பற்றிய முன்குறிப்பு.

நான் ஒரு பொறியியல் பட்டதாரி.

நான் எடுத்த சில அவசர முடிவுகளினால் மரணம் வரை தள்ள பட்டு மீட்க பட்டவன்.

என்னுடைய கடந்த காலங்கள் இனி வரும் நாட்களில்...
22 வயது இளைஞன் நான். என்னுள் எழுத்தார்வத்தை  விதைத்தது,  திருப்பூர் மாநகரிலே குடி கொண்டிருக்கும் பரிசல்காரன்.

மரியாதைக்குரிய பரிசல்காரனுக்கு கோடான கோடி நன்றிகள்